ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐவர் மீது குற்றச்சாட்டு

பினாங்கு, மே 17-

ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக ஐந்து பேர் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.

30 வயது இங் செங் பூன், ராயன் லிம் வெய் என், கெவின் லீ காய் வென், 20 வயது ஓய் காஹ் சுன், உட்பட 19 வயது லிம் வெய் ஹாங் ஆகியோர் மாஜிஸ்திரேட் முகமது அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 5,000 வெள்ளி மற்றும் கூடிய பட்சம் 50,000 வெள்ளி அபராதம், மூன்று ஆண்டுகள் சிறை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 4(1)(g) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த மே 14 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் பினாங்கு, ஜாலான் புக்கிட் கம்பீர், தி வியூ அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தை புரிந்ததாக அந்த ஐவர் மீது குற்றசாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்