மோட்டார் சைக்கிளை திருடியதாக இருவர் கைது

அம்பாங், மே 17-

அம்பாங்கை சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடுவதை தொழிலாக வைத்திருக்கும் இருவருடைய செயல்பாடு போலீசாரிடம் சிக்கிய பின் அம்பலமானது.

கடந்த மே 12 ஆம் தேதி அம்பாங் ஜெயா, லெம்பா ஜெயா உத்தாரா, ஜாலான் லெம்பா பெர்மாய் – யில் உள்ள குடியிருப்பு பகுதியில் பூட்டப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமாஹா 135LC ரக மோட்டார் சைக்கிள் காணாததை குறித்து அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 28 மற்றும் 33 வயதிற்கு உட்பட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்ததாக முகமது அசாம் கூறினார்.

மேலும், மூன்று மோட்டார் சைக்கிள்கள், சாவிகள், தலை கவசம், கைத்தொலைப்பேசிகள் உட்பட நான்கு ஆடைகளும் சந்தேகிக்கும் நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக முகமது அசாம் அறிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் கடந்த மே 15 ஆம் தேதி தொடங்கி இன்று வரை மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்