ஆன்லைன் சூதாட்டம் : 13 பேர் கைது !

ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் சிண்டிகேட்டுகள் மற்றும் தொலைபேசி அழைப்பு மைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் 2.5 மில்லியன் வெள்ளி வரை லாபம் ஈட்டுவது கண்டறியப்பட்டது, இந்த விவகாரம் தொடர்பில், நேற்று பினாங்கில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட Op Dadu சோதனைகளில் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் காவ் கோக் சின் தெரிவித்தார்.

காலை 10.45 மணி அளவில் ஜெலுத்தோங்கில் உள்ள வணிகத் தளத்திலும், பாயான் பாரு, குவீன்ஸ்பே-இல் உள்ள உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றிலும் அந்தச் சோதனை நடத்தப்பட்டது.

ஜெலுத்தோங்கில் 4 ஆடவரும் 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாயான் பாருவில் 4 ஆடவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியா, வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் முகநூல், WeChat போன்ற செயலி வழி தொடர்பு கொண்டு, மாதம் ஒரு மில்லியன் வரையில் ஊதியம் பெறலாம் என ஆசை வார்த்தைகளைச் சொல்லி எமாற்றும் மோசடி கும்பல் இது என காவ் கோக் சின் கூறினார்.

மாதம் 2 ஆயிரம் வெள்ளி முதல் 6 ஆயிரம் வரையிலான ஊதியம் கொடுத்து வேலைக்கு ஆள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களுக்குக் குற்றப் பின்னணி ஏதும் கிடையாது எனவும் அவர்கள் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கபட்டுளதாகவும் காவ் கூறினார்.

இந்த வழக்கு சூதாட்ட மையச் சட்டம் 1953இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்