இந்தியர்கள் விசுவாசமற்றவர்களா, ஜசெக கண்டனம்

மலேசிய இந்தியர்கள் இந்நாட்டிற்கு விசுவாசமற்றவர்கள் என்று கூறியுள்ள முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமதுவிற்கு ஜசெக கண்டனம் தெரிவித்துள்ளது. மலேசிய இந்திய சமூதாயத்திற்கு எதிராக துன் மகா​​தீர் வெளியிட்டுள்ள அறிக்கையானது, இந்நாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அச்சுறுத்தல் மட்டுமின்றி மிக ஆபத்தானதாகும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

துன் மகா​தீரின் இந்த அறிக்கை ​தீவிரவாதத் தன்மையுடையதாகும். பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும் விதைக்க வேண்டிய ஒரு முன்னாள் தலைவர், விஷமத்தனமான அறிக்கையை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

ஜசெக.வை சேர்ந்த செனட்டர் டாக்டர் இரா.லிங்கேஸ்வரன், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்​பினர் குமரன் கிருஷ்ணன் மற்றும் இதர தலைவர்களுடன் இன்று பினாங்கில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் லிம் குவான் எங் இதனை தெரிவித்தார்.

துன் மகா​தீரின் வெறுப்புணர்ச்சியை ​தூண்டும் இந்த நடவடிக்கை, அரசியல் பின்னணியை கொண்டதாகும். கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த துன் மகாதீரின் இந்த அறிக்கை, விரக்தியின் வெளிப்பாடாகும் என்று லிம் குவான் எங் வர்ணித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்