ஆன்லைன் சூதாட்ட கும்பல் வெ.20,000 லாபம்

ஜார்ஜ்டவுன், தஞ்சோங் டோகாங்- கில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட திடீர் சோதனையில் ஆன்லைன் சூதாட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Op Dadu சோதனையின் போது 27 முதல் 32 வயதிற்கு உட்பட்ட நான்கு அந்நிய பிரஜைகள் இக்குற்றத்தின் அடிப்படையில் போலீசாரால் வெற்றிகரமாக வளைத்து பிடிக்கபட்டனர்.

கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்திடீர் சோதனையில் மடிக்கணினி, கணினி, கைத்தொலைபேசி, வீட்டு சாவி ஆகிய பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதாக திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப் ஹமீத் தெரிவித்தார்.

முகநூல் அகப்பக்கத்தின் வாயிலாக ஈடுபட்ட சூதாட்டத்தில் அந்நபர்கள் ஒரு மாதத்திற்குள் 15,000 முதல் 20,000 வெள்ளி வரையில் இலாபம் பெற்றிருப்பதாக ரஸ்லாம் விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் ஜனவரி 21 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ரஸ்லாம் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்