கடல்வாழ் உயிரினங்களின் விலை அதிகரிக்காது

ஒவ்வொரு ஆண்டு சீனப்புத்தாண்டின் பொழுது அபலோன் எனப்படும் கடலோர பகுதியில் வாழும் ஒரு காஸ்ட்ரோபாட் மொல்லக்ஸ் – யின் விலை அதிகமாக இருப்பதுடன் கடல் வெள்ளரி மற்றும் மீன் மாவ் விலைகளும் உயர்ந்தே காணப்படும்.

முந்தைய ஆண்டினை காட்டிலும் இந்த மூன்று கடல்வாழ் உயிரினங்களின் விலை இவ்வாண்டு சற்று குறைந்தே காணப்படும் என்று தெரியவந்துள்ளது.

சீனா அதிக அளவிலான அபலோன் உற்பத்தியை கொண்டிருப்பதனால் அதனை குறைந்த விலையிலேயே சந்தையில் விற்க ஏற்பாடு செய்திருப்பதாக விற்பனையாளரான டத்தோ சான் லிம் குவான் கூறினார்.

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் மாவ், உள்நாட்டிலேயே அறுவடை செய்யப்படும் கடல் வெள்ளரிகள் போதுமான அளவிலேயே வழங்கப்படுவதாக சான் லிம் பதிவிட்டார்.

கோவிட் 19 நோய்தொற்றினால் சில வியாபாரிகளின் பொருளாதாரம் இன்னமும் பாதிப்படைந்திருந்தாலும் இவ்வாண்டு வணிகம் சிறப்பாக அமையும் என்று நம்புவதாக சான் லிம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்