ஆய்வுப்பணிகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும்

பினாங்கு, மே 20-

மலேசிய அருங்காட்சியகம், கல்வி மறறும் ஆய்வுக்கான தளம் என்ற 2024 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளுக்கு ஏற்ப அருங்காட்சியகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தி, பழங்காலப் பொருட்களின் வரலாற்று நிகழ்வுகளை அல்லது உண்மையான தரவுகளின் வலிமையின் வாயிலாக முறைசாரா கற்றல் நிறுவனமாக தன்னை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் மலேசிய அருங்காட்சியகத்துறை, மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமாகவும் / நாட்டின் பாரம்பரிய பொக்கிஷங்களை போன்றுவதன் வாயிலாகவும் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை விரிவுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று துணை அமைச்சர் சரஸ்வதி வலியுறுத்தினார்.

பினாங்கு, லெபுஹ் லைட், டேவான் ஸ்ரீ பினாங்- கில் கடந்த சனிக்கிழமை 2024 ஆம் ஆண்டு தேசிய அளவிலான அனைத்தலக அருங்காட்சியகத் தினத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் துணை அமைச்சர் சரஸ்வதி மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ வர்த்தகம் சார்பில் இந்நிகழ்வை தொடக்கி வைத்த துணை அமைச்சர் சரஸ்வதி, பல இன மக்களின் வரலாற்று, கலை, கலாச்சார பாரம்பரியத்தை சேகரித்து, பாதுகாக்கும் கலைப்பொக்கிஷங்களின் பாதுகாவலனாக மலேசிய அருங்காட்சியகம் விளங்குகிறது புகழாரம் சூட்டினார்.

மடானி அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப மலேசிய அருங்காட்சியகம், தனது திட்டங்களில் ஒன்றாக மக்களிடையை ஒற்றுமையை விதைப்பதிலும், ஒருவருக்கொருவர் நல்லெண்ணம், சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பரை மரியாதை போன்ற உணர்வை மேலோங்கச் செய்வதில் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வர வேண்டும் என்று துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் உள்ள அனைத்து இனத்தவர்களின் கலை, கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் சிட்ரா நுசா @ Muzium என்ற திட்டத்தை உள்ளடக்கிய இந்த நிகழ்வை முதல் முறையாக பினாங்கில் நடத்தப்படுவது பினாங்கு மக்களுக்கு மட்டுமின்றி, பினாங்கை பிறப்பிடமாக கொண்ட தமக்கும் வழங்கப்பட்ட ஒரு மரியாதையாக கருதுவதாக துணை அமைச்சர் சரஸ்வதி தமது உரையில் தெரிவித்தார்.

முன்னதாக, இந்நிகழ்வில் பல இனத்தவர்களின் பாரம்பரிய நடன நிகழ்வுகள் படைக்கப்பட்டன. சரவா பூர்வக்குடியினரின் பிடாயுஹ் நடனத்திற்கு துணை அமைச்சர் சரஸ்வதியும் இணைந்து நடனமாடி, தனது திறனை வெளிப்படுத்தியது நிகழ்வின் உச்சமாக அமைந்தது.

ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கலைப்படைப்புகளுக்கு உயரிய சொல்லாடல் வழங்குவதல், பின்னல் கலை என பல்வேறு நிகழ்வுகளுடன் கடந்த மே 13 தொடங்கிய இந்த அனைத்துலக அருங்காட்சியகத் தினம், வரும் மே 22 ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்