பெட்ரோல் நிலையத்தில் திடீர் உணவு சமைத்த 15 பேர் கைது

பகாங், மே 20-

கெந்திங் ஹைலேண்ட்ஸ் – யில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் மீ வகையை சேர்ந்த திடீர் உணவு சமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 10 ஆண்கள் உட்பட ஐந்து பெண்கள் பென்த்தோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த வேளை அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்த பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக பகாங் போலீஸ் தலைவர் டத்தோ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை நிறைவு பெற்று வருவதுடன் மேல் நடவடிக்கைகளுக்காக இந்த விசாரணை அறிக்கையை துணை அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்படவிருப்பதாக யஹாயா ஓத்மான் இன்று கூறினார்.

கடந்த மே 14 ஆம் தேதி பிற்பகல் 12.35 மணியளவில் குழு ஒன்று பெட்ரோல் நிலையத்தில் திடீர் உணவை சமைப்பதை குறித்த 50 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகியதை தொடர்ந்து போலீசார் அந்நபர்களை கைது செய்ததாக யஹாயா ஓத்மான் மேலும் தகவலளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்