குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமின் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்

கோலா பெராங் அஜில் -வில் உள்ள சட்டவிரோத குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புகள் மலேசிய குடிநுழைவுத்துறை (ஜே.ஐ.எம்)- யினால் கடுமையாக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட தடுப்பு முகாமில் 900 சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்பட முடியும் என்கிற வேளையில் தற்போது 552 பேர் மட்டுமே அவ்விடத்தில் தங்கியுள்ளதாக மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் அசார் அப்த் ஹமீத் கூறினார்.

தடுப்பு முகாமில் இருக்கும் கைதிகள் தப்பிச் செல்வதை தவிர்ப்பதற்கு அஜில் குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமின் நிர்வாகம் கட்டுப்பாடுகளையும் பாதுகாப்புகளையும் கடுமையாக்கியுள்ளதாக அசார் அப்த் தெரிவித்தார்.

எத்தகைய சவால்களையும் எதிர்நோக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பாக, கட்டுப்பாடுகள் குறித்து எழுகின்ற பிரச்னைகளை கையாள்வதற்கு தயார்நிலையில் இருப்பதாக பெசுட், ஜெர்த்தே-வில் உள்ள சில பகுதிகளில் சேகரிப்பு, செலவுகள் குறித்த நடவடிக்கைகளை பற்றி அறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் இதனை அசார் அப்த் அறிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை தாப்பா, பீடோரில் உள்ள சட்டவிரோதக்குடியேறிகளின் தற்காலிக தடுப்பு முகாமிலிருந்து தப்பி ஓடிய 131 தடுப்பு கைதிகளின் சம்பவத்தை தொடர்ந்து இக்கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்