இணையப் பாதுகாப்பு சட்ட மசோதா, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்

கோலாலம்பூர், மார் ச்19 –

இணைய பாதுகாப்பு சட்ட மசோதாவின் வரைவு குறித்த கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றதும் அச்சட்ட மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இப்புதிய சட்ட மசோதாவின் உருவாக்கம் குறித்து அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், அச்சட்டத்தின் தேவைகளை ஆய்வு செய்ய தொடர்பு அமைச்சு மற்றும் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொடர்பு துணையமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார்.

“புதிய சட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படலாம்…அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான Teo Nie Ching குறிப்பிட்டார்..

“சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை முதல் தகவல் அறிக்கையாக உருவாக்குவதுடன், இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதா”? என்று மக்களவையில் தும்பாட் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்துக் மும்தாஸ் ம்டி னாவி எழுப்பிய கேள்விக்கு Teo Nie Ching இவ்வாறு பதிலளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்