இந்திய சமுதாயத்திற்கு அதிக நன்மை அளிக்கக்கூடிய திட்டங்களில் மித்ரா தீவிர கவனம் செலுத்தும்

கோலாலம்பூர், மார்ச் 20 –

இந்திய சமூகத்திற்கு மிகுந்த தாக்கத்தையும், நன்மையையும் அளிக்கக்கூடிய திட்டங்களில் மித்ரா தீவிர கவனம் செலுத்தும் என்ற ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ ஆரோன் அகோ டாகாங் இன்று உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் துறை அமைச்சின் கீழ் இருந்த இந்தியர்களின் சமூகவியல், உருமாற்றுப்பிரிவான மித்ரா, தற்போது ஒற்றுமைத்துறை அமைச்சின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியர் சமூக செயல் வடிவ திட்டத்தில் காணப்பட்ட பல தடைகள், கட்டுப்பாடுகள், மற்றும் பலவீனங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மித்ரா சீரமைக்கப்பட்டு, புதிய இலக்கை நோக்கி வழிநடத்தப்படுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆரோன் அகொ டாகாங் இதனை குறிப்பிட்டார்.

இந்தியர் சமூக செயல் வடிவ திட்டமான PTMI குறித்து Pemandu எனப்படும் செயல்முறை நிர்வாகம் மற்றும் செயலாக்கப்பிரிவு மேற்கொண்ட ஆய்வில் 23 வியூகங்களில் ஆறு மட்டுமே மித்ராவை உள்ளடக்கியுள்ளது.

பெமான்டு மூலம் ஒற்றுமைத்துறை அமைச்சு ஏற்பாடு செய்கின்ற பட்டறைகள், ஆய்வுகள் மற்றும் பல்வேறு தப்பினருடான சந்திப்புகள் யாவும், இந்திய சமூக செயல் வடிவ திட்டம் அல்லது மித்ரா புளுபிரிண்ட் திட்டத்தின் வாயிலாக இந்தியர்களுக்கு ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாகும். எனவே அந்த திட்டங்களில் மித்ரா தீவிர கவனம் செலுத்தும் அமைச்சர் விளக்கினார். .

மித்ரா, இந்தியர்கள் எதிர்நோக்கக்கூடிய அனைத்துப் பிரிச்னைகளையும் தீர்வு காணக்கூடிய ஓர் அரசாங்க ஏஜென்சி அல்ல என்பதையும் அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் தெளிவுபடுத்தினார்.

. காரணம், .இந்தியர்களின் சமூகவியல் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டு மற்ற பிரச்னைகளை கவனிப்பதற்கு இதர அமைச்சுகளும், அரசாங்க ஏஜென்சிகளும் உள்ளன என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மித்ரா, / இந்திய சமூதாயத்திற்கான ஒரு சிறிய அரசாங்க ஏஜென்சியாகும். இந்தியர்களின் ஒட்டுமொத்தப் பிரச்னையை அந்த ஏஜென்சியிடம் முன்வைக்க இயலாது.

எனவே இந்தியர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளில் அடிப்படையாக இருக்கின்ற வறுமை ஒழிப்பு, அடையாள ஆவணம் இல்லாத பிரச்னை, குடியுரிமை, கோவில்கள், சமயம் சார்ந்த விவகாரங்கள் மற்றும் பெண்களின் சமூக நலன் போன்ற விவகாரங்களில் மித்ரா தீவிர கவனம் செலுத்தும் என்று அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் Aaron Ago Dagang விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்