இன்ஸ்பெக்டர் ஷீலா விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 20 –

கடந்த ஆண்டு, கோலாலம்பூர், பிரிக்பில்ஸ் பகுதியிலுள்ள ஒரு பேரங்காடி மையத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரியான ஷீலா ஷாரோன் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும் என்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை மீண்டுக் கொள்ள வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் 36 வயதான இன்ஸ்பெக்டர் ஷீலாசமர்பித்த பிரதிநிதித்துவ மனுவிற்கு சட்டத்துறை அலுவலகம் இன்னும் முடிவு செய்யாததை தொடர்ந்து இவ்வழக்கு நடைபெற்றாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, Sheila -விற்கு எதிரான இவ்வழக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு நடைபெறும் என்று மாஜிஸ்திரேட் இலி மரிஸ்கா காலிசான் இன்று அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்