நாட்டுக்கோட்டை நகரத்தாருடன் இணைந்து இணக்கமான சூழலில் இனி பினாங்கு தைப்பூச விழா !

பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தாருடன் இணைந்து இணக்கமான சூழலில் இனி ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பான முறையில் பினாங்கு தைப்பூச விழா முன்னெடுக்கப்படும் என்று பினாங்கு இந்து  அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர் அறிவித்துள்ளார்.

நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கும், இந்து அறப்பணி வாரியத்திற்கும் இடையில் ஓர் இணக்கமான உறவு தற்போது மலர்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த உறவு வலுப்பெற்று, ஒவ்வொரு தைப்பூச விழாவிலும் இரத ஊர்வலங்கள்  மேலும் சிறப்பான முறையில் நடைபெறும் என்று ராயர் குறிப்பிட்டார்.

இன்று பினாங்கு தைப்பூச விழாவையொட்டி  மாலை மணி 3.30 க்கு தண்ணீர் மலை கோவிலுக்கு  சிறப்பு வருகை மேற்கொண்ட பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow, முன்னாள் முதலமைச்சரும், பகான் எம்.பியுமான லிம் குவான் எங் உட்பட இதர பிரமுகர்களை வரவேற்று. உரை நிகழ்த்திய போது ராயர் இவ்வாறு கூறினார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் /  அதன் துணைத் தலைவர் டாக்டர் ரா. லிங்கேஸ்வரன் தலைமையில் இந்து மாணவர்களுக்கான கல்வி நிதி உதவித் திட்டங்களை சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதையும் ராயர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் Chow Kon Yeow வுடன் இணைந்து பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங், துணை நிதி அமைச்சர் Lim Hui Ying, ஒற்றுமைத்துறை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி,  பினாங்கு சுற்றுலா மற்றும் புத்தாக்க பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் Wong Hon Wai, Bukit Bendera MP Syerleena Abdul Rashid உப்பட வருகை தந்திருந்த சிறப்பு பிரமுகர்களை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் நரேஸ் குமார்  பொன்னாடை போர்த்தி,  மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்