இந்திய சமூகத்தின் வாக்குகளை புனிதனின் MIPP கட்சி பிரிக்கும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24-

பெரிக்காதான் நசியனாலில் இணைந்துள்ள MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அக்கூட்டணிக்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முடியுமா? என்பதை தற்போதைக்கு கூற முடியாது என மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் சிவமுருகன் பாண்டியன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தேர்தலில் இந்திய வாக்காளர்களைக் கவர, பி. புனிதன் தலைமையிலான MIPP கட்சி இதர தலைவர்களின் உதவிகள் தேவைப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

அக்கட்சி முன்வைக்கின்ற இலக்குகள் எவ்வளவு தூரம் அச்சமூகத்தினரின் ஆதரவைக் கவர்ந்துள்ளது என்பதை பரிசோதிக்கக்கூடிய களமாக, கோல குபு பாரு இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்றாரவர்.

மற்றோர் அரசியல் ஆய்வாளரான மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப்பேராசிரியர் டாக்டர் அவாங் அஸ்மான் அவாங் பாவி கூறுகையில், பெரிக்காதான் நசியனாலுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொண்டாலும் MIPP கட்சியின் தலைமைத்துவம் பெரியதொரு செல்வாக்கைக் கொண்டிருக்காததால், கோல குபு பாரு இடைத்தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்திவிடாது என கூறினார்.

MIPP கட்சியின் வருகை, தேர்தலில் இந்திய வாக்காளர்களுக்கான தேர்வை அதிகரிக்க செய்திருந்தாலும், இந்திய சமூகத்தின் வாக்குகளை பிரிக்கவே வழிசெய்யும் என அவாங் அஸ்மான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்