பச்ச அரிசி விநியோக தட்டுப்பாட்டை களைய சிறப்பு திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

உள்ளூர் சந்தைகளில் அரசி விநியோக தட்டுப்பாடு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, குறுகிய கால அடிப்படையில் உள்நாட்டு பச்ச அரிசிக்கான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமைச்சின் அந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், சந்தையில் பச்ச அரிசி விநியோகம் சீராக இயங்குவதை உறுதிபடுத்த LPP எனப்படும் விவசாயிகள் மேம்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அதன் தலைவர் டத்தோ மஹ்ஃபுஸ் ஓமர் கூறினார்.

நாடு தழுவிய நிலையில் 103 விவசாயிகள் அமைப்புகளை உட்படுத்தி, அவற்றின் கீழ் உள்ள கடைகள் வாயிலாக பச்ச அரிசிகள் விநியோகிக்கப்படும்.

மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி வரையில் 519.36 மெட்ரிக் டன் அரிசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 5.537 மில்லியன் வெள்ளி என மஹ்ஃபுஸ் ஓமர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்