ஒற்றுமை அரசாங்கத்திற்கு கூடுதல் ஆதரவு கிடைக்க வேண்டுமென்றால் சனுசி அதிகமாக பேச வேண்டும்

கெடா, ஏப்ரல் 24-

ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள கட்சிகளிடையே உள்ள பிளவுகளைப் பெரிதாக்க உறுதி பூண்டுள்ள கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹம்மது சனுசி முகமட் நோரின் கூற்றை, அமானா கட்சியின் தேர்தல் பிரிவு இயக்குநர் முகமது சானி ஹம்சான் கடுமையாக சாடினார்.

சனுசி முகமட் நோர் பேசுவதில் வல்லவரே தவிர, செயலில் அல்ல. பேசுவதற்கு எவ்வித கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, எதுவேண்டுமானாலும் பேசலாம் என நினைத்திருக்கிறார் போல என்று முகமது சானி தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் சனுசி முகமட் நோர் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக பேசும்போது, பெர்சத்து கட்சியிலிருந்து ஒரு மக்கள் பிரதிநிதி பிரதமருக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர். இதுவரையில் எழுவர் பிரதமருக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவரது பேச்சுகள் நிச்சயமாக ஒற்றுமை அரசாங்கத்திற்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் மக்களின் ஆதரவை அதிகப்படுத்தித் தருகின்றன. ஆகையால், அவர் அதிகம் பேச வேண்டும் என்பதே தமது விருப்பம் என சானி ஹம்சான் கேலியாக கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்