இந்தோனேசியாவைய முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்

விழா கால பண்டிகைகளின் போது தொழிலாளர்களுக்கு/ அனைத்து முதலாளிமார்களும் குறைந்த பட்சம் ஒரு மாத சம்பளத்தை போனஸ் தொகையாக வழுங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்க வேண்டும் என்று மலேசிய சமூக பாதுகாப்பு சந்தாதாரர்கள் ஆலோசனை சேவை சங்கத்தின் தலைவர் J. Solomon கேட்டுக்கொண்டுள்ளார்.

தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF, “Belanjawanku” என்ற பெயரில் நடத்திய ஓர் ஆய்வில் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள தனிநபர்கள் கிட்டத்தட்ட ஒரு மாத சம்பளத்தை அல்லது சம்பளத்தில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகையை, தங்களின் சமூகவியல் நடவடிக்கைகள் மற்றும் வருடாந்திர விழா கால பண்டிகைக்காக செலவிடுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டியிருப்பதை Solomon மேற்கோள்காட்டினார்.

இந்நிலையில் அடித்தட்டு மக்கள் குறிப்பாக B40 மற்றும் M40 மக்களை நினைத்துபார்க்க வேண்டும் என்று Soloman கேட்டுக்கொண்டார்.

விழா காலங்களை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக ஒரு மாத சம்பளத்தை போனஸ் தொகையாக வழங்கும் இந்தோனேசியாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று Soloman வலியுறுத்தினார்.

முதலாளிமார்கள் இவ்வாறு ஒரு மாத சம்பளத்தை விழா காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவதை நடைமுறைப்படுத்துவது மூலம் குறைந்த சம்பளம் பெறுகின்ற தொழிலாளர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

குறிப்பாக, இந்த உதவியானது, பண கவலையின்றி பண்டிகைகளின் உற்சாகம் குறையாமல் தொழிலாளர்கள் கொண்டாடி மகிழும் நிலை ஏற்படும் என்று Soloman தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்