இனப் பதற்றத்தை தூண்டும் அக்மால் சாலேஹ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

புத்ராஜெயா, ஏப்ரல் 05-

அல்லாஹ் சொல் கொண்ட காலுறை விவகாரம் தொடர்பில், மக்களிடையே சினத்தை மூட்டி, இன மற்றும் சமய பதற்றத்தை ஏற்படுத்தும் உம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சரவாக்-க்கைச் சேர்ந்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஜாஹ் வலியுறுத்தினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிய செய்வதோடு, காலுறை விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர உள்துறை அமைச்சு உட்பட அமலாக்கத் தரப்பு பல முயற்சிகளை எடுத்துவிட்டாலும், டாக்டர் அக்மால் சாலேஹ் தொடர்ந்து மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி வருகிறார்.

சம்பந்தப்பட்ட காலுறையை விற்பனை செய்த KK மார்ட் கடையை புறக்கணிக்கும் பரப்புரையை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் அமைதியுடைய மாநிலமாக இருந்துவரும் சரவாக்-க்கில் KK மார்ட் கடைக்கு எதிரான வன்முறை நிகழும் என தாம் நினைத்திருக்கவில்லை என்றார் அப்துல் கரீம்.

டாக்டர் அக்மால் சாலேஹ் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததும் KK மார்ட் கடைகள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் குறித்த விசாரணை தாமதமாக மேற்கொள்ளப்படுவதும் தமக்கு வியப்பளிப்பதாக, அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஜாஹ் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்