முஹ்யிட்டின் தலையாட்டினால் மட்டுமே பெர்சாத்து-வில் உயரிய பதவி!

கோலாலம்பூர், ஏப்ரல் 05-

18 மாதக்கால ஒத்திவைப்புக்கு பிறகு, இவ்வாண்டு நடைபெறவிருக்கும் பெர்சாத்து கட்சி தேர்தலில், கட்சி தலைவர் டான் ஸ்ரீ முஹ்யிட்டின் யாசின், தமக்கு பச்சைக்கொடி காட்டினால் மட்டுமே, தாம் உயரிய பதவிக்கு போட்டியிட போவதாக பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்ஜாஹ் சய்னுட்டின் தெரிவித்தார்.

பெர்சாத்து-வையும் நாட்டையும் வழிநடத்துவதற்கான ஆற்றலை தாம் கொண்டிருப்பதாக, இதற்கு முன்பு கூறியிருந்த முஹ்யிட்டின் யாசின், தம்மை எதிர்க்கட்சி தலைவராகவும் நியமித்துள்ளார்.

வருகின்ற கட்சி தேர்தலில் உயரிய பதவிக்கு தாம் போட்டியிடுவதற்கு அவர், அனுமதியளிக்கின்றாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென ஹம்ஜாஹ் சய்னுட்டின் கூறினார்.

பெர்சாத்து-வில் உறுப்பினராகி ஒரு தவணை ஆன பிறகே ஒருவர் உயரிய பதவிகளுக்கு போட்டியிட முடியும் என்பதால் ஹம்ஜாஹ் சய்னுட்டின், உயரிய பதவிக்கு போட்டியிடும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை என இதற்கு முன்பு செய்திகள் வெளிவந்திருந்தன.

முஹ்யிட்டின் யாசின் கட்சி தலைவராக நீடிப்பதையே தாம் ஏற்பதால், இதுவரையில் அக்கட்சியில் தலைமைத்துவ போராட்டம் ஏதும் ஏற்படவில்லை. அவரை எதிர்த்து யார் களம் கண்டாலும், முஹ்யிட்டின் யாசின் -னை தேர்தலில் வெற்றி பெற செய்வதே தமது நிலைப்பாடு எனவும் ஹம்ஜாஹ் சய்னுட்டின் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்