பள்ளிவாசலில் தொந்தரவு செய்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு

பினாங்கு, மார்ச் 20 –

பினாங்கு, பத்து பெரிங்கி கில் கடந்த வாரம் பள்ளிவாசலில் மேண்டுமென்றே மற்றவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தி தொந்தரவு செய்த மூதாட்டி ஒருவருக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 65 வயதுடைய சோபியா அப்துல் மாஜிட் கடந்த மார்ச் 12 ஆம் தேதி இரவு 10 மணியளவில் பது பெரிங்கி ஏர் ராஹ்மான்னில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

குற்றவியல் சட்டம் 298 பிரிவின் கீழ் இக்குற்றச்சாட்டு அமைக்கப்பட்டிருப்பதுடன் குற்றம் என்று நிரூமிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அப்பெரியவரின் உடல்நலனை சோதனையிடுவதற்கு Ulu Kinta மருத்துவமனையில் ஒரு மாதக் காலம் அனுமதித்து கண்காணிப்பதற்கு மாஜிஸ்திரேட் நாட்ராதும் நாயிம் சைடி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்