இன பிளவு நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை இல்லையெனில் மலேசியா பின்னோக்கி செல்லும்! ராபிடாஹ் அஜிஸ் எச்சரிக்கை

தனது தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக, நாட்டில் இன பிளவுகளை ஏற்படுத்தி நிலைமையை மோசமடைய செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை அரசாங்கம் எடுக்காவிட்டால், மலேசியா பின்னோக்கி செல்லும் என அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை முன்னாள் அமைச்சர் டான் ஸ்ரீ ராபிடாஹ் அஜிஸ் எச்சரிக்கை விடுத்தார்.

அவ்விவகாரங்களில் அமலாக்கத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்காததது, மலேசிய தலைவர்கள் பலவீனமானவர்கள் என்பதுடன் எளிதில் மிரட்டலுக்கு இலக்காக்ககூடியவர்கள் என்ற தோற்றத்தைக் காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள தலைவர்களை குறுகிய சிந்தனையை உடைய சிறு நெப்போலியன்-கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதை போன்றவும் மலேசியா முறையான தலைமைத்துவம் இன்றி இருப்பது போல் பார்க்கப்படும் சூழல் உள்ளது.

மலேசியர்கள் அமைதியான சூழலில் ஒற்றுமையாக வாழ நினைக்கின்றனர். ஆனால், , சில தரப்பினரின் அளவுக்கதிகமான அகங்காரம் மற்றும் அதிகார பலத்தை காட்டும் போக்கின் காரணமாக, சிலர் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயல்வதாக, ராபிடாஹ் அஜிஸ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்