டீசல் உதவித்தொகையை விரைந்து அமல்படுத்த கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16-

நாட்டில் டீசல் கடத்தல் அதிகரித்துவரும் நிலையில், அதனை முற்றிலுமாக துடைத்தொழிக்க, அரசாங்கம் இலக்கிடப்பட்ட தரப்பினர்களுக்கு மட்டுமே டீசல் உதவித் தொகையை வழங்கும் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்நடவடிக்கையின் மூலம் டீசல் முறைகேட்டையும் கடத்தலையும் தடுக்க முடிவதோடு, அரசு உதவி தேவைப்படுகின்ற இலக்கிடப்பட்ட தரப்பினர்கள் மட்டுமே பயன்பெற முடியும் என மலேசிய பயனீட்டாளர்கள் சங்க கூட்டமைப்பு – FOMCA-வின் தலைமை நிர்வாக அதிகாரி சரவணன் தம்பிராஜாஹ் தெரிவித்தார்.

நாட்டின் முதன்மை தரவு தளமான – PADU -வின் வாயிலாக குறைந்த வருமான பெறுகின்ற குடும்பம் மற்றும் முக்கிய பொருளாதார துறைகளுக்கு மட்டுமே உதவித் தொகை கிடைப்பதை உறுதிபடுத்த முடியும் என சரவணன் கூறினார்.

கடந்த மார்ச் 27ஆம் தேதி வரையில் 3.2 மில்லியன் லீட்டரை உட்படுத்திய 324 டீசல் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றின் மதிப்பு 7.5 மில்லியன் வெள்ளி என அவர் குறிப்பிட்டிருந்தார். அதனை மேற்கோள்காட்டி சரவணன் அவ்வாறு கருத்துரைத்தார்.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, டீசலுக்கான உதவித் தொகை மீட்டுக்கொள்ளப்பட்டால், நாட்டில் 80 முதல் 85 விழுக்காடு வரையிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.

அந்நடவடிக்கையின் வழி, டீசல் கடத்தலை முறியடிக்க முடியும் என்பதோடு, காலம் காலமாக நிகழ்ந்துவரும் டீசல் கடத்தல்களால், வரி செலுத்துகின்ற மக்களின் பில்லியன் வெள்ளி கணக்கான பணம் இழக்கப்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பிரதமர் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்