இயற்கை, மனித நேய காப்பதற்கான ஒப்பந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது

நீலாய், மார்ச் 31 –

கடந்த மார்ச் 26 ஆம் தேதி நெகிரி செம்பிலான், நீலாய் தமிழ்ப்பள்ளியில் ஜோபா மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இயற்கை மற்றும் மனித நேய காப்பதற்கான ஒப்பந்த உடன்படிக்கை ஒன்று வெற்றிகரமாக கையெழுத்திடப்பட்டது.

மலேசிய நாட்டின் சிறப்புமிக்க ‘sejahtera’ என்கிற மனிதக்குல மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வு கருத்தை மையமாக கொண்டு ‘Bionity School’ என்ற திட்டத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோபா கல்வி கழகம் உருவாக்கியது குறிப்பிடத்தக்ககது.

இத்திட்டத்தை கல்வியிலும் சமூகத்தினரிடையும் மேம்பாடு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த மார்ச் 17 ஆம் தேதியிலிருந்து மார்ச் 27 ஆம் தேதி வரையில் பல மாநிலங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்திய ஜோபா முனைவர் ஜான் பிரிட்டோ, மலேசிய ஜோபா இயக்கத்தின் ஆலோசகர் குமாரவேலு, மலேசிய ஜோபா இயக்கத்தின் தலைவர் மனோகரன் , நீலாய் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் கலா ரெங்கசாமி மற்றும் நீலாய் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இவ்வேளையில் நன்றிகள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.

இயற்கையை பாதுகாக்கும் நல்லதொரு சிந்தனையுடன் நீலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் செடிகள் நட்டு அதற்கு நீர் ஊற்றி இத்திட்டத்தை சிறப்பாக தொடக்கி வைத்தனர்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்