பாடுவில் பதிவு செய்யாதவர்கள் அடிப்படை தரவுகளை மட்டுமே வைத்திருப்பர்

பெட்டலிங் ஜெயா, மார்ச் 31 –

நாட்டின் முதன்மை தரவு தளமான பாடுவில் தங்களின் தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கும் மலேசியர்களுக்கு தங்களின் அடிப்படை தரவுகள் தானாகவே கணினியில் பதிவு செய்யப்படும் என்று தலைமை புள்ளியியல் இலாகாவின் தலைவர் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

இதுவரையில் பாடுவின் அமைப்பின் கீழ் சுமார் 30 மில்லியன் மலேசியர்களின் தரவுகள் தங்களிடம் இருப்பதாக உசிர் மஹிடின் கூறினார்.

இருந்த போதிலும் இது மக்களின் அடிப்படை தரவுகள் மட்டுமே பல நிறுவனங்களிடமிருந்து சேகரித்த வேளையில் தங்களுக்கு மேலும் டைனாமிக் சார்ந்த தகவல்கள் தேவைப்படுவதாக செய்தியாளர் கூட்டத்தில் இன்று அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று இரவு 11.59 மணி வரையில் சுமார் 10.6 மில்லியன் பொதுமக்கள் தங்களின் தரவை பாடுவில் புதுப்பித்திருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்