இரண்டாம் நாள் வெற்றிநடை போடும் பாதயாத்திரை

மாரான், மார்ச் 22.

மாரான், ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93 ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை பத்துமலை திருத்தலத்திலிருந்து பகாங், மாரானை நோக்கி தொடங்கிய பாதயாத்திரை பயணம் இன்று வெள்ளிக்கிழமை, இரண்டாம் நாளாக வெற்றிநடை போட்டு வருகிறது.

காலை உணவிற்கு பிறகு பங்கேற்பாளர்கள் காராக், முருகன் கோவிலிலிருந்து அதிகாலை 4 மணியளவில் கம்போங் அவாஹ் – வை நோக்கி சுமார் 54 கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இப்புனித பயணம் லன்ச்சாங் – கில் நிறுத்தப்பட்டு ஜம்பு ரியாஸ் பகுதியை சேர்ந்த ‘Lanchang boys’ உறுப்பினர்கள் பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக கூடுதல் உணவுகளை வழங்கி அவர்களின் ஆதரவை தெரிவித்தனர்.

‘Lanchang boys’ -யின் சேவை மனப்பான்மையை நினைவுக்கூறும் வகையில் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத்தலைவரும், உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் மூடா கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் R. சிவபிரகாஷ் நினைவு பரிசுகளை அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

பிறகு, பங்கேற்பாளர்களின் விருப்பதிற்கு ஏற்றவாறு இஞ்சி தேநீர் வழங்கப்பட்டதுடன் வழியில் ஒரு தாயார் இலவசமாக உணவுகளை கொடுத்து அவரின் சேவையை வெளிப்படுத்தினார்.

கிழக்கை நோக்கி ஓர் ஆன்மீக சிந்தனையுடன் செல்கின்ற இந்த பாதயாத்திரை பயணத்தில் பொதுமக்கள் வழங்குகின்ற சேவை பாராட்டுக்குரியது என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறினார்.

இப்பாதயாத்திரை பங்கேற்பாளர்களின் குடும்ப உணர்வோடும் சிரிப்புடனும் நிரம்பிய ஒரு பயணமாக அமைகிறது. நாளை மறுநாள் ஆயிரக்கணக்கானோர் இப்புனித பாதயாத்திரை பயணத்தில் ஒன்றுக்கூடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்