கடும் வறிய நிலை மக்கள் பிரச்சனைக்கு தீர்வா?

கோலாலம்பூர், மார்ச் 22.

கோலாலம்பூரில் கடும் வறிய நிலையிலான மக்கள் பிரச்னைக்கு தீர்வுக்காணப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் கூறியிருந்தார்.

ஆனால், தாங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வில் நிலைமுறை அதற்கு நேர்மாறாக உள்ளதாக பெர்டிவி சூப் கிட்சேன் எனும் அரசு சாரா அமைப்பின் துணைத்தலைவர் லைலி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அந்த அறிவிப்பு, பி40 தரப்பைச் சேர்ந்த வீடற்றவர்களுடன் பழகிவரும் சமூக தன்னார்வள பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவர் கூறினார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம், சமூகநலத்துறை, போலீஸ் ஆகியவற்றுடன் இணைந்து தங்களின் அமைப்பு ஆய்வை மேற்கொண்டது. சுமார் 300 மீட்டர் இடைவெளியில் சாலைகளில் 200 வீடற்றவர்கள் இருப்பதைக் காண முடிந்தது.

பகுதிகள் வாரியாக பார்க்கையில் சில இடங்களில் வாரத்திற்கு ஆயிரம் உணவுகளும் இதர சில பகுதிகளில் இரண்டாயிரம் உணவுகளையும் தனது அமைப்பு வழங்கி வருவதாக லைலி இஸ்மாயில் கூறினார்.

சீன பெருநாள் கொண்டாட்டத்தின் போது, கோலாலம்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் வறிய நிலையில் உள்ள மக்கள் பிரச்னைக்கு 100 விழுக்காடு தீர்வு காணப்பட்டதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்