காலுறை விவகாரத்தில் டாக்டர் அக்மல் சாலிஹ் இஸ்லாமியர்களின் குரலை பிரதிநிதிக்கிறார்!

ஆயர் கேரோஹ், மார்ச் 22.

‘அல்லா’ எனும் சொல் பொறிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய காலுறை விவகாரத்தில், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முகமது அக்மல் சாலிஹ் தொடர்ந்து குரலெழுப்பி வருவதில், அடிப்படை காரணம் உள்ளது.

அனைத்து தரப்பினர்களின் மனதை பாதிக்கச்செய்துள்ள அவ்விவகாரத்தில்,மெர்லிமாவு சட்டமன்ற உறுப்பினருமான அவர், நாடு முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களின் குரல்களை பிரதிநிதித்து அவ்வாறு குரலெழுப்புவதாக, மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஏபி ரவூப் யூசோஹ் தெரிவித்தார்.

நாம் அனைவரது சமயத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும். காலுறையில் ‘அல்லா’ எனும் சொல் இடம்பெற்றிருந்தது, இஸ்லாமியர்களின் மனதை பாதித்துள்ளது. சம்பந்தப்பட்ட காலுறைகளை தயாரித்து விற்கப்பட்ட விவகாரத்தில், சமயத்தைத் தற்காக்கும் தங்களது கொள்கையை, அரசியலுக்காக மாற்றிக்கொள்ளப்படாததை அவர் சுட்டிக்காட்டினார்.

அதுப்போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, அதனை சாதாரணமாக கருதிவிடாமல் உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் டத்தோ ஶ்ரீ ஏபி ரவூப் யூசோஹ் வலியுறுத்தினார்.

முன்பாக, சர்ச்சைக்குரிய காலுறைகளை விற்ற KK MART கடையை புறக்கணிக்க வேண்டுமென டாக்டர் முகமது அக்மல் சாலிஹ் முன்னெடுத்த பிரச்சாரத்திற்கு டிஏபி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்