இரண்டாம் நிலையில் இருக்கும் வெப்பம், மக்கள் எச்சரிக்கை

கெடா, பிப்ரவரி 28 –

கெடா, போகோக் செனா வில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஸை எட்டும் என்பதால் தேசிய பாதுகாப்பு மன்றம் ம்.கெ.ன் வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் குபாங் பசு,பாடாங் தெராப் சிக்,பாலிங்,பென்டாங்,கோத்தா ஸ்தார் மற்றும் லங்காவி ஆகிய இடங்களிலும் முதல் நிலையில் வெப்பம் இருப்பதாகவும் அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

போகோக் செனா வில் அடுத்த மூன்று நாட்கள் பகல் நேரத்தில் 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மாறுபடலாம் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாநிலத்தில் குடியிருப்பவர்களுக்கு கடுமையான வெப்பநிலை இருப்பதால் கவனமாக இருப்பதுடன் அதிகளவில் வெளியே செல்வதை குறைத்து கொள்ளுமாறும் மாநில, மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் முகமட் காலில் அப்துல் அசிஸ் கேட்டுக் கொண்டார்.

மேலும் நிறைய தண்ணீர் அருந்துவதை பழக்கமாக்கி கொள்வதுடன் வெப்பக் காலத்தில் குளிர்பானங்களை தவிர்க்குமாறும் முகமட் காலில் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்