2023 ஆம் ஆண்டிற்கான EPF லாப ஈவு, 5.6 விழுக்காடு வரை இருக்கலாம்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 28 –

வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் சேம நிதி வாரியமான இ.பி.ப். சந்தாதாரர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகை, 5.4 விழுக்காடு முதல் 5.6 விழுக்காடு வரை இருக்கலாம் என்று கோடிகாட்டப்ப்டடுள்ளது.

இம்முறை நாடு முழுவதும் உள்ள ஒரு கோடியே 60 லட்சம் இ.பி.ப் சந்தாதாரர்கள் மனநிறைவுக்கொள்ளும் வகையில் லாப ஈவு விழுக்காடு விகிதம் உயர்ந்து இருக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இ.பி.ப்.வெளிநாட்டு முத​லீட்டின் செயல்திறன் சிறப்பாக இருப்பதால் 2023 ஆம் ஆண்டுக்கான லாபு ஈவு கூடிய பட்சம் 5.6 விழுக்காடாக இருக்கும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 5.35 விழுக்காடு லாப ஈவுடன் ஒப்பிடுகையில் இந்த முறை சற்று அதிகாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்