இரண்டு மடங்காக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை

கோலாலம்பூர், மார்ச் 19 –

நாடு முழுவதும் நேற்று திங்கட்கிழமை 1,908 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்பாக பதிவாகிய 1,199 விபத்துக்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 709 விபத்துக்களாக அதிகரித்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சபெரி கூறினார்.

சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 விபத்துக்களாக அதிகரித்து மொத்தம் 16 விபத்துக்கள் இருப்பதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

சாலை விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கைய குறைக்க முடியும் என்று மொகமாட் அஸ்மான் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்