வெ.67,000 லட்சம் பெற்றதற்காக அரசு பணியாளர் கைது

கெடா, மார்ச் 19-

கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிக்கு சான்றளிப்பு வழங்குவதற்காக 67,000 வெள்ளி தொகையை ஒரு நிறுவன மேலாளரிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் ஒருவரை பெர்லிஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

மேற்பார்வையாளராக பணியாற்றும் 50 வயதுடைய அவ்வாடவர் நேற்று மாலை 3 மணியளவில் பெர்லிஸ், SPRM அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து நீச்சல் குளம் பராமரிப்பு பணி மற்றும் இரசாயனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் மாதாந்திர முறையில் லட்சம் கேட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன.

கங்கார் பெர்லிஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ரிமாண்டில் வைப்பதற்கு விண்ணப்பித்ததை தொடர்ந்து, குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அவ்வாடவரை இன்று முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் துவான் அகமாட் ஹமிடி முஸ்தாபார் தீர்ப்பளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்