பாஸ் உலாமா தலைவரை சாடினார் DAP எம்.பி.

நோன்பு மாத காலத்தில் பள்ளிகளின் சிற்றுண்டி சாலைகள் வழக்கம் போல் செயல்படும், அவற்றை மூட வேண்டிய அவசியமில்லை, முஸ்லிம் அல்லாத மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ள கல்வி அமைச்சர் Fadhlina Sidek- கை குறைகூறிருக்கும் பாஸ் கட்சியின் மத்திய உலாமா தலைவர் Ahmad Yahaya-வை DAP Bangi நாடாளுமன்ற உறுப்பினர் Syahredzan Johan இனறு கடுமையாக சாடினார்.

முஸ்லிம் அல்லாத மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் என்ன தவறு என்று Syahredzan Johan கேள்வி எழுப்பினார். பாஸ் உலாமா தலைவர், வேண்டுமென்றே இவ்விவகாரத்தை சமயத்துடன் தொடர்புபடுத்தி, அரசியலாக்க முயற்சிக்கிறார் என்று Syahredzan Johan குற்றஞ்சாட்டினார்.

புனித நோன்பு மாதத்தை மதிக்காததைப் போல கல்வி அமைச்சர் Fadhlina Sidek- நடந்து கொள்கிறார் என்று பாஸ் கட்சியின் உலாமா தலைவர் Ahmad Yahaya கூறியிருப்பது மற்றவர்களுக்கு வெறுப்புணர்வை ​தூண்டி விடும் செயலாகும் என்று Syahredzan Johan வர்ணித்தார்.

நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் திறக்கப்படுவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. குறிப்பாக பள்ளிக்கு வருகின்ற முஸ்லிம் அல்லாத மாணவர்களும், ஆசிரியர்களும் அவற்றை பயன்படுத்தும் நிலை இருக்கிறது.

கடந்த காலங்களில் நோன்பு மாத காலத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் மூடப்பட்டதால் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் தா​ங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை பள்ளியின் கழிப்பறையில் உண்ட கசப்பான சம்பவத்தை ​மீண்டும் காண விரும்புகிறாரா? பாஸ் கட்சியின் உலாமா தலைவர் என்று Syahredzan Johan வினவினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்