இரண்டு வங்கி அதிகாரிகளை போலீசார் கைது

ஷாஹ் அலாம், மார்ச் 29-

ஏ.தி.எம் கார்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த இரண்டு வங்கி அதிகாரிகள் உட்பட 16 பேரை சிலாங்கூர் காவல்துறையினர் கைது செய்ததன் வாயிலாக சிண்டிக்கேட்டை முறியடித்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் Klang Valley -யில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் 20க்கும் 30 க்கும் வயதிற்கு உட்பட்ட 15 மலேசியர்கள் உள்ளடங்கிய மூன்று உள்நாட்டு பெண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

அந்த அதிகாரிகள் வங்கி கணக்குகள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை 1,000 வெள்ளி முதல் 1,500 வெள்ளி வரையில் வாங்கி 8,000 வெள்ளிக்கு சிண்டிகேட்டுகளிடம் விற்பதாக ஹுசைன் ஓமர் விளக்கினார்.

கடந்த ஆறு மாதங்களில் அந்த இரண்டு அதிகாரிகள் சட்டவிரோதமாக 40 வங்கி கணக்குகளை திறக்க உதவியதுடன் ஒவ்வொரு ஏடிஎம் கார்டுகளுக்கும் 250 வெள்ளி லஞ்சம் பெற்றதாக ஹுசைன் ஓமர் மேலும் குறிப்பிட்டார்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்