126 வணிக வாகனங்களுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டன

பினாங்கு, மார்ச் 29-

பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் காஸ் லேபிஹ் முவாத்தான் திடீர் சோதனையின் மூலம் பல்வேறு குற்றங்களுக்காக வணிக வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு 126 நோட்டீஸ்களை பினாங்கு சாலைபோக்குவரத்து துறை வெளியாக்கியுள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் காலை 7 மணி வரையில் பிரதான நெடுஞ்சாலைகள், தொழிற்சாலை இடங்கள் உட்பட முக்கியமான பகுதிகளில் பினாங்கு ஜே.பி.ஜே செயல்பாட்டு உறுப்பினர்கள் சோதனை மேற்கொண்டதாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் அதிகமான எடையை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்வதை தவிர்க்கவும் சட்டவிரோதமாக செயல்படுவதை கையாளவும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 மற்றும் பொதுப் போக்குவரத்து சட்டம் 2010 -யின் கீழ் இச்சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், சட்டவிரோதமாக ஸ்த்ரோப் விளக்குகள் பொருத்தியிருத்தல், வாகனத்தில் இருட்டான கண்ணாடியை போட்டிருத்தல், மற்றும் பல குற்றங்கள் அடிப்படையில் 13 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்