இராஜ இராஜேஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

சிராம்பான், மார்ச் 3 –

சிரம்பான், தாமான் துவான்கு ஜாபார் ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீமகா இராஜ இராஜஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நிகழ்வு, வரும் மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

அன்று வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நான்கு கால சிவ வேள்வி மற்றும் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு செந்தமிழ் திருமறைகளால் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

இந்த சிவராத்திரி பூஜையை வழிநடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் வருகை தந்து சிறப்பு செய்யவிருக்கிறார்.

நடைபெற​விருக்கும் சிறப்பு திருமஞ்சனத்திற்கு, பக்தர்கள் அனைவரும் அபிஷேக பொருள்கள், பூஜைக்கு தேவையான மலர்கள், வில்வம் மற்றும் பழங்கள் போன்றவற்றைக் தாராளமாகக் கொண்டு வரலாம். மகா சிவராத்திரி பூஜைக்கு அன்னதானம் வழங்கவிருக்கும் அன்பர்கள் ஆலய நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளலாம். மேல்விபரங்களுக்கு 017-322 5400 என்ற எண்ணில் அழைக்கலாம்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்