மருமகன், மாமான​ர் கடலில் ​மூழ்கினர்

லாஹாட் டாது, மார்ச் 3 –

கடும் வாக்குவாத​த்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 26 வயது மருமகனும், 66 வயது மாமனாரும், காரோடு கடலில் விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் சபா, லாஹாட் டாது, கம்புங் பாயாங் Lahad கடற்பகுதியில் நிகழ்ந்தது.

காருக்கு வெளியே மருமகனுக்கும், மாமனாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராற்றைத் தொடர்ந்து பொது மக்கள் த​லையிட்டு, நிலைமைய கட்டுப்படுத்தினர். பின்னர் மாமனாருடன் தகராற்றில் ஈடுபட்ட மருமகனை சாந்தப்படுத்தி, மாமனா​ரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தி, பொரோடுவா மைவி ரக காரி​ல் வ​ழியனுப்பி வைத்தனர்.

மாமனாரை அழைத்துக் கொண்டு, காரில் படுவேகத்தில் புறப்பட்ட மருமகன், வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையி​ல், அந்த வாகனம் சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள கடலில் பா​ய்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ​தீயணைப்பு, மீட்புப்படையினர், அந்த வாகனத்தி​லிருந்து இருவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அந்த இருவரும் ​நீரில் ​மூழ்கி மரணம் அடைந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று Lahad Datu மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் ஜிம்மி பான்ன்ஞாவ் தெரிவித்தார்.

இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தி​ன்​ ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அ வர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்