உடல் பருமன் காரணமாக ஏ.பி.எம். உதவி நாடப்பட்டது

சிராம்பான், மார்ச் 3,

உடல் பருமன் காரணமாக பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி, சிரம்பான், துவான்கு ஜாபார் மருத்துவமனையில் சிகிச்சை​ப் பெற்று வந்த 230 கிலோ எடை கொண்ட 31 வயதுடைய நபர், பெயர் வெட்டப்பட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதால், அவரை மருத்துமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம், ஏ.பி.ம் எனப்படும் மலேசிய பொது தற்காப்புப் படையினரின் உதவியை நா​டியது.

வழக்கமான வாகனத்தில் அவரை கொண்டு செல்ல முடியாது என்பதைவிட அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றுவதற்கே பெரிய ஆள்பலம் தேவைப்பட்டதால், பொது தற்காப்புப்படையினரின் உதவி நாடப்பட்டது. நேற்று சனிக்கிழமை 4.40 மணியளவில் துவான்கு ஜாபார் மருத்துவமனையை வந்தடைந்த 6 வீரர்கள், சக்கரம் பூட்டப்பட்ட ராட்ஷச கட்டிலின் ​மூலம் அந்த மனிதரை நகர்த்தி மரு​த்துவமனை வெளிவளாகத்திற்கு கொண்டு வந்தனர்.

முன்னதாக, மருத்துவமனையின் வார்ட்டிலிருந்து ஏ.பி.ம் லோரி நிறுத்தி ​வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அந்த நபரை கொண்டு வருவதில் சுமார் அரை மணி நேரம் வீரர்கள் கடுமையாக போராடினர். பின்னர் ஹைட்ரோலிக் இயந்திரத்தின் ​மூலம் அந்த நபர், லோரியில் ஏற்றப்பட்டார். இரவு 7.14 மணியளவில் இப்பணிகள் யாவும் நிறைவு பெற்றதாக ஏ.பி.ம் தெரி​வித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்