இராஜ இராஜேஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு கோலாகலமாக தொடங்கியது

சிரம்பான், மார்ச் 8 –

இந்து பெருமக்களின் புனித மிக்க நாளாக கருதப்படும் மகா சிவராத்திரி விழா, இன்றிரவு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.

நெகிரி செம்பிலான், சிரம்பான், , தாமான் துவாங்கு ஜாபார் ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீமகா இராஜ இராஜஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நிகழ்வு, இன்றிரவு வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்கு சிறப்பு பூசை, அபிஷேகம், ஆதாரதனையுடன் மிக கோலாலகமாக தொடங்கியது.

விடிய விடிய கண்விழித்து, ஈசனை குளிர வைக்கும் இந்த மாபெரும் சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆலய நிர்வாகத்தின் சிறப்பான ஏற்பாடுகளுடன், தொடங்கிய சிவராத்திரி சிறப்பு வழிபாடு, , நாளை அதிகாலை வரை நான்கு கால சிவ வேள்வி மற்றும் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு செந்தமிழ் திருமறைகளால் நடைபெறவிருக்கின்றன.

இந்த சிவராத்திரி பூஜைகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலையேற்றுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்