தலைமை ஆசிரியர் உட்பட இருவர் கைது

பள்ளிப் பாட உபகரணங்களை வாங்கியதைப் போன்று போலியான ரசீதை பயன்படுத்தி, பத்தாயிரம் வெள்ளியை கோரியது தொடர்பில் ஒரு தலைமையாசிரியர் உட்பட இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் இன்று கைது செய்துள்ளது.

40 வயது பெண்ணும், 50 வயது தலைமையாசிரியரும் , இன்று காலை 10 மணியளவில் கோத்தா கினாபாலு எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2028 ஆம் ஆண்டு பள்ளிக்கு உபகரணங்களை விநியோகிக்கும் மாதுவுடன் கூட்டு சேர்ந்து பள்ளி தலைமையாசிரியர் இந்த மோசடி வேலையையை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியரும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு இருப்பதை சபா மாநில எஸ்.பி.ஆர்.எம் இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்