இரு சட்ட அமலாக்க அதிகாரிகள் ஏழு நாட்கள் தடுப்புக்காவல்

மசானா சினின், மே 14-

முறையான பயண ஆவணங்கள் ஏதுமின்றி நாட்டினுள் குடிநுழைந்த இரண்டு இந்தோனேசிய தொழிலாளர்கள் மீது சட்டப்படி எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் 2,500 வெள்ளி கையூட்டு பெற்ற குற்றத்திற்காக இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

மலாக்கா, ஜாசினில் நேற்று இரவு 11.30 மணியளவில் 39 வயது நபர் ஒருவர் இதுக்குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை முடியும் வரையில் 58 மற்றும் 37 வயதிற்கு உட்பட்ட அந்த அதிகாரிகளை தடுப்பு காவலில் வைப்பதற்கு எஸ்.பி.ஆர்.எம் விண்ணப்பித்ததை தொடர்ந்து, அவ்விருவரும் இன்று தொடங்கி வருகின்ற மே 20 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைப்பதற்கு மஜிஸ்ட்ரெட் மசானா சினின் உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10,000 வெள்ளி அபராதம் மற்றும் 20 ஆண்டுகள் சிறை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 17 (a) கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டப்படுவர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்