வேலை மோசடியில் வெளிநாட்டு பிரஜைகள் பாதிப்பு

கூலாய், மே 14-

கேங் பாலா எனப்படும் வேலை மோசடியில் சிக்கிய வெளிநாட்டு பிரஜைகள் சிறைபிடிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்டதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது,

தொழிற்சாலை ஆபரேட்டர், வீட்டு வேலை செய்தல் போன்றவற்றிற்கு வேலை வாங்கி தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிண்டிகேட்டுகள் வாக்குறுதியளித்து அவர்களை அழைத்துச் சென்று ஏமாற்றுவதாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.

22 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய வெளிநாட்டு பிரஜைகள் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றவும் ஒருநாளைக்கு 35 முறை உடலுறவில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் குமார் கூறினார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி ஜொகூர், கூலாய்-யில் மேற்கொண்ட திடீர் சோதனையில் கேங் பாலா சிண்டிகேட்டுகளான நான்கு உள்ளூர் மற்றும் நான்கு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக குமார் மேலும் குறிப்பிட்டார்.

இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் பாதுகாப்பாக மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் வேளையில், கைது செய்யப்பட்ட எட்டு பேர் மீது நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குமார் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்