மலேசியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு

புத்ராஜெயா, மே 14-

மலேசியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மலேசிய புள்ளி விவர இலாகா அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மலேசியாவின் மக்கள் தொகை 2.3 விழுக்காடு அதிகரித்து, 3 கோடியே 40 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 3 கோடியே 32 லட்சமாக இருந்துள்ளது என்று மலேசிய புள்ளி விவர இலாகா கூறுகிறது.

புதிய எண்ணிக்கையில் மலாய்க்காரர்கள் 58 விழுக்காடாகவும், சீனர்கள் 22.6 விழுக்காடாகவும், இந்தியர்கள் 6.6 விழுக்காடாகவும், இதர இனத்தைச் சேர்ந்த பூமிபுத்ராக்கள் 4.4 விழுக்காடாகவும், ஈபானியர் 2.4 விழுக்காடாகவும், கடாசான் டுசுன் 2.1 விழுக்காடாகவும், இதர இனத்தவர்கள் மிக சிறிய விழுக்காடாகவும் உள்ளனர் என்று அவ்விலாகா தெரிவித்துள்ளது.

புதிய எண்ணிக்கையில் 3 கோடியே 60 லட்சம் பேர் மலேசியப் பிரஜைகள் என்றும் 34 லட்சம் பேர் அந்நிய நாட்டவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட புதிய புள்ளி விவரத்தின்படி இதே காலக்கட்டத்தில் அந்நிய நாட்டவர்களின் எண்ணிக்கையும் 6 லட்சம் உயர்ந்துள்ளதாக அவ்விலாகா தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்