இலக்கவியல் இலாகா உருவாக்கப்படும்

கோலாலம்பூர், மார்ச் 25.

அதிக சிக்கலை ஏற்படுத்தி வரும் இலக்கவியல் தொழில்நுட்பம் தொடர்புடைய குற்றச்செயல்களை கையாளுவதற்கு அத்துறையை அடிப்படையாக கொண்ட புதிய இலாகா ஒன்றை உருவாக்கும் நோக்கத்தை அரச மலேசிய போலீஸ் படை கொண்டு இருப்பதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கும், மக்களுக்கும் மேலும் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்கு அரச மலேசிய போலீஸ் படையின் இந்த பரிந்துரையை அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

Digtal என்ற அழைக்கப்படும் இலக்கவியல் தொழில்நுட்பம் உலகின் புரட்சியையையும், அன்றாட மக்களின் வாழ்வியல் போக்கையும் மாற்றி அமைத்து வருகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடும் அடங்கும் என்று சுட்டிக்காட்டினார்.

இத்துறை சார்ந்த குற்றச்செயல்களை கையாளுவதில் அரச மலேசிய போலீஸ் படையினர் மிகுந்த சிக்கலையும், சவாலையும் எதிர்நோக்கியிருப்பதாக கோலாலம்பூர் PULAPOL போலீஸ் பயிற்சி மையத்தில் 217 ஆம் ஆண்டு போலீஸ் தினத்தையொட்டி வழங்கிய செய்தியில் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்