உயர் அதிகாரி உட்பட இரு போலீஸ்காரர்களுக்கு தடுப்புக்காவல்

கோலாலம்பூர், மார்ச் 25.

கோலாலம்பூர் வட்டாரத்தில் சட்டவிரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவற்றுக்கு பாதுகாப்பு அளித்து வந்ததாக கூறப்படும் ஓர் உயர் போலீஸ் அதிகாரியையும், ஒரு போலீஸ்காரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM செய்துள்ளது.

அந்த இரு போலீஸ்காரர்களும் நேற்று புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

அந்த உயர் போலீஸ் அதிகாரிக்கு மூன்று நாள் தடுப்புக்காவலும், ஒரு போலீஸ்காரருக்கு ஒரு நாள் தடுப்புக்காவலும் பெறப்பட்டுள்ளதாக SPRM உளவுப்பிரிவின் இயக்குநர் டத்தோ சய்னுள் தாருஸ் தெரிவித்தார்.

40 வயதுடைய அந்த போலீஸ் அதிகாரி கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரையில் விபச்சாரம், சூதாட்டம், குண்டர் கும்பல் நடவடிக்கைகள் போன்றவற்றை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட கும்பல்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அந்த உயர் போலீஸ் அதிகாரிக்கு சொந்தமான சில வர்த்தகத் தளங்களில் SPRM மேற்கொண்ட சோதனையில் 12 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான ரொக்கத் தொகை மீட்கப்பட்டுள்ளது.

கையூட்டும் வாங்கும் விவகாரத்தில் அந்த போலீஸ் உயர் அதிகாரியுடன் தொடர்பில் இருந்த இதர நபர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக டத்தோ சய்னுள் தாருஸ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்