இலக்கவியல் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதி

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பிரதான பங்களிப்பை இலக்கவியல் பொருளாதாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கு அத்துறை சரியான தடத்தை நோக்கி செல்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

தற்போது இலக்கவியல் பொருளாதாரம், நாட்டின் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 23.3 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கி வருகிறது. வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் அந்த அளவை 25.5 விழுக்காடாக உயர்த்துவதற்கு இலக்கு வகுக்கப்பட்டுள்ளதாக என்று அமைச்சர் கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மின்னியில் தொழில்முனைவர்களுக்கான கண்காட்சி பெருவிழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பிரதான உரை நிகழ்த்துகையில் கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.

டிஜிட்டல் எனப்படும் நாட்டின் இலக்கவியல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் உள்கட்டமைப்பு மற்றும் அதன் தொடர் இணைப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அவ்வகையில் நாட்டின் துரித பொருளியல் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கக்கூடிய துறையாக அடையாளம் காணப்பட்டுள்ள இலக்கவியல் பொருளாதார துறையில் இணைந்து தங்களின் பங்களிப்பை வழங்குவதற்கு ஆர்வம் கொண்டுள்ள பொது மக்களை இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் அமைச்சர் கோபிந்த சிங் உறுதி கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்