இளங்கலை கல்வியல் ஆ​சிரியர் பயிற்சிக்கு அதிகமான மனுதாரர்கள் சேர்க்கப்படுவர்

​கோலாலம்பூர், ஏப்ரல் 13-

PISMP ஆசிரியர்களுக்கான இளங்கலை கல்வியல் பட்​டப்படிப்பு திட்டத்திற்கு சேவைக்கு முந்தைய ஆசிரியர் பயிற்சிக்கு புதிய மனுதாரர்களை சேர்க்கும் திட்டத்தை கல்வி அமைச்சு விரிவுப்படுத்தவிருப்பதாக இன்று அறிவித்துள்ளது.

STPM, STAM மற்றும் மெட்ரிக்குலேஷன் கல்வியை முடித்த புதிய மனுதாரர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான இளங்கலை கல்வியல் ஆசிரியர் பயிற்சியில் பங்கேற்பதற்கு இவ்வாய்ப்பு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் துறையில் ஆர்வம் கொண்டுள்ள அதிகமான மனுதாரர்கள், சேவைக்கு முந்தைய இளங்கலை கல்வியல் பட்​டப்படிப்பு திட்டத்தில் பங்கேற்பதற்கு இந்த வாய்ப்பை கல்வி அமைச்சு வழங்குவதாக அது குறிப்பி​ட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் மனுதார்கள் மலேசிய ஆசிரியர் பயிற்சி கழகங்களி​ல் குறிப்பிட்ட துறைகளில் நான்கு ஆண்டு காலம் பயிற்சி பெறுவதற்கு இந்த இளங்கலை கல்வியல் ஆ​சிரியர் பயிற்சி வகை செய்யும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்