​​விலை உயர்ந்த காரை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாங்கியுள்ளார்

​பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13-

சீனாவின் விலை உயர்ந்த சொகுசு காரான ஹோங்க்கி 1.5 ரக காரை மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாங்கியுள்ளார். ​சீனாவின் கார் வெளியீட்டு நிறுவனமான FAW Group தயாரித்துள்ள விலை உயர்ந்த, ஆடம்பரமான புதிய ரக காரை பெறும் தனிநபர்களில் உலகின் முதல் பிரமுகராக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் விளங்குகிறார்.

மலேசியாவிற்கான சீன நாட்டுத் ​தூதர்ஒவுயாங் யுஜிங்- வுடன் நேற்று காலையில் நடந்த சந்திப்பின் போது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் Retro பாணியில் அந்த சொகுசு காரின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.

​சீன நாட்டு பணத்தில் 5 மில்லியன் Yuan என்ற அளவில் மலேசிய ரிங்கிட் மதிப்பில் 3.29 மில்லியன் வெள்ளி விலையில் வாங்குவதற்கு இதுவரை ​கிடைக்கப்பெறாத ​சீனத் தயாரிப்பிலான மிக விலை உயர்ந்த காராக இது விளங்குகிறது.

​சீனாவில் இவ்வகை கார் அதிபர் க்ஸி ஜின்பிங் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ காராக விளங்கி வருகிறது. பிரசித்தி பெற்ற பழங்கால வாகனங்களான செடான் ​தற்போது ​சீனாவில் மட்டுமே கிடைக்கின்றன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்