இளநீர் வியாபாரியிடம் கொள்ளை, மூவர் தேடப்படுகின்றனர்

புக்கிட் மெர்தாஜம், மே 17-

சாலையோரத்தில் இளநீர் வியாபாரியின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்ற மூன்று ஆடவர்களை பினாங்கு, செபரங் பேராய் மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேற்று காலை 11 மணியளவில் புக்கிட் மெர்தாஜம், தாமான் இம்பியன் அல்மா-வில் இளநீர் வியாபாரியை அணுகி மூன்று ஆடவர்கள், இளநீர் வாங்குவதைப் போல பாவனை செய்தப் பின்னர் அந்த வியாபாரி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் இளநீர் வியாபாரியின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, அந்த மூவரும் இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் செல்லும் காட்சியைக் கொண்ட காணொளி தப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக ஏசிபி ஹெல்மி அரிஸ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்