இளம் வயதில் ”சாதனைச் சுடர்மாமணி” உயரிய விருது

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி மாணவர்களை முன்னிலைப்படுத்தி இளம் சாதனையாளர்களை உருவாக்குவதிலும் பட்டமளிப்பு விழா உட்பட அவர்களுக்கான மேன்மையான திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவதிலும் ஒரு முன் உதாரண இளைஞராக விளங்கி வரும் தெலுக் இந்தானை பிறப்பிடமாக கொண்ட மாஸ்டர் உகான்தருண்சுகுமார், ”சாதனைச் சுடர்மாமணி” எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 14 ஆம் தேதி சென்னை, மதுராந்தகம், கே.பி. திருமணமஹாலில், மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஏழாம் ஆண்டு முப்பெரும் விழாவில் மாஸ்டர் உகான்தருண்சுகுமாருக்கு இவ்விருது வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் மொத்தம் 10 பேருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விருதுக்கு மலேசியாவிலிருந்து 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 300 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த முப்பெரும் விழாவில் மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் எம்.வரதராஜன் மற்றும் செயலாளர் கவிஞர். தமிழ்ப்பிரியன் ஆகியோரால் உகான்தருண்சுகுமாருக்கு சாதனை சுடர்மாமணி விருது வழங்கப்பட்டது.

இவ்விருதுக்கு தம்மை அழைத்து, தம்மை தேர்வு செய்து இவ்விருது வழங்கப்படுவதற்கு பெரும் பங்காற்றியவர் மன்றத்தின் செயலாளர் கவிஞர்.தமிழ்ப்பிரியன் என்று நன்றி பெருக்குடன் உகான்தருண்சுகுமார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்