லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்

பெத்தோங், மே 21-

பெத்தோங், ஜாலான் எங்காரி லெமனக் – கில் மண்வாரி கருவிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று 30 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பரிதாபமாக இருவர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு 7.29 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து பெத்தோங் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சரவாக் தீயணைப்பு, மீட்பு செயல்பாட்டு நிலையம் ஓர் அறிக்கையில் அறிவித்திருந்தது.

இச்சம்பவத்தில் 32 வயது ராப்சன் மைக் டொமினிக் கிமன் என்ற அந்த லாரி ஓட்டுநரும் அவருடன் பயணித்த இந்தோனேசிய பிரஜையான ஹென்ட்ரி என்ற ஆடவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அது தெரிவித்திருந்தது.

மேல் நடவடிக்கைகளுக்காக விபத்தில் சிக்கியவர்களின் உடல் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்